/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லம் சிப்காட் சாலையை சீரமைக்க கோரிக்கை
/
வல்லம் சிப்காட் சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : டிச 11, 2024 11:13 PM

ஸ்ரீபெரும்புதுார்,:ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லம் சிப்காட் தொழில் பூங்காவில் 100 க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலையில், ஆயிரக்கணக்கானோர் பணிப்புரிந்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில் இருந்து வல்லம் சந்திப்பில் இருந்து பிரிந்து செல்லும் வல்லம் சிப்காட் சாலையில் நாள்தோறும் ஏராளமான தொழிற்சாலை பேருந்துகள், கனரக வாகனங்கள் சென்று வருன்றன.
தவிர, வல்லம், மாத்துார், வல்லக்கோட்டை கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி சுங்குவார் சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது.
கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால், சாலை ஆங்காங்கே சேதமடைந்து பள்ளங்களாக மாறியுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகினறனர்.
மேலும், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிர்பாராத பள்ளத்தில் விழுத்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.