/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த மின் கம்பம் புதிதாக அமைக்க கோரிக்கை
/
சேதமடைந்த மின் கம்பம் புதிதாக அமைக்க கோரிக்கை
ADDED : டிச 16, 2024 02:45 AM

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சி, மசூதிக்கு செல்லும் சாலை அருகே உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க, மின்தட பாதைக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், ஒரு மின்கம்பத்தில் சிமென்ட் காரைகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்தால், ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் நொறுங்கி விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முத்தியால்பேட்டை வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.