/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் சேதமான கொடிமரத்தை மாற்ற கோரிக்கை
/
திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் சேதமான கொடிமரத்தை மாற்ற கோரிக்கை
திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் சேதமான கொடிமரத்தை மாற்ற கோரிக்கை
திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் சேதமான கொடிமரத்தை மாற்ற கோரிக்கை
ADDED : அக் 23, 2024 01:06 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில், பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. இப்பகுதி ஆற்றங்கரை மீது தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலான அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தினசரி வழிபாட்டுக்கு வந்து செல்கின்றனர்.
இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐந்து உற்சவங்கள் விசேஷமாக நடைபெறுகின்றன.
இந்நிலையில், கோவில் வளாகத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்ட கொடி மரம் சேதம் அடைந்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.
எனவே, திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில் பழுதடைந்த இக்கொடி மரத்தை அகற்றி, புதிய கொடிக்கம்பம் அமைக்க பக்தர்கள் மற்றும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.