/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட வழிகாட்டி பலகை அமைக்க கோரிக்கை
/
சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட வழிகாட்டி பலகை அமைக்க கோரிக்கை
சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட வழிகாட்டி பலகை அமைக்க கோரிக்கை
சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட வழிகாட்டி பலகை அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 14, 2025 12:46 AM

குண்ணவாக்கம்:உத்திரமேரூர் ஒன்றியம், படூர் கூட்டுச்சாலையில் இருந்து, குண்ணவாக்கம் வழியாக நெல்வாய் இணைக்கும் சாலை உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி, உத்திரமேரூர், மதுராந்தகம், புக்கத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத் துறை தீர்மானித்தது. அதன்படி, ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 15 கோடி ரூபாய் செலவில், 9 கி.மீ., துாரத்திற்கு, நான்கு மாதங்களுக்கு முன், சீரமைப்பு பணி நடைபெற்றது.
அப்போது, சாலை விரிவாக்கத்திற்காக குண்ணவாக்கம் கூட்டுச்சாலையில் இருந்த வழிகாட்டி பலகை அப்புறப்படுத்தப்பட்டது.
தற்போது பணி முடிந்தும் அகற்றம் செய்த அப்பலகை மீண்டும் அமைக்கப்படாமல், அங்குள்ள சாலையோர நிலத்தில் சாய்ந்த நிலையில் கிடக்கிறது.
இதனால், அச்சாலை வழியாக பயணிப்போர் தங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கான பிரிவு சாலைகள் குறித்து அறிய முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே, குண்ணவாக்கம் கூட்டுசாலையில் அகற்றம் செய்த வழிகாட்டி பலகையை மீண்டும் அமைக்க, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, உத்திரமேரூர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாலை விரிவாக்கப் பணி சமீபத்தில்தான் முடிவுற்றது. வழிகாட்டி பலகையில் எழுதப்பட்டு இருந்த ஊர் பெயர்கள் குறித்த பதிப்புகள் சாயம் வெளுத்து தெளிவாக தெரியாத நிலை உள்ளது.
அவைகள் புதியதாக பொறிக்கப்பட்டு விரைவில் அதே இடத்தில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.