/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாத்துார் ஏரியை சீரமைக்க கோரிக்கை
/
மாத்துார் ஏரியை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 02, 2025 11:34 PM

ஸ்ரீபெரும்புதுார்:கோரை புற்கள் சூழ்ந்துள்ள மாத்துார் ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட மாத்துார் ஊராட்சியில், ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையோரம், பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் ஏரி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த ஏரி இருந்து வந்தது.
தற்போது ஏரி எந்த ஒரு பாராமரிப்பும் இல்லாமல் உள்ளது. எரி முழுதும் கோரை புற்கள் வளர்ந்து உள்ளது.
மேலும், ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையோரம் உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் குப்பையை, ஏரியில் கொட்டுகின்றனர்.
இதனால், தற்போது ஏரி முழுதும் சீரழியும் அபாய நிலையில் உள்ளது. எனவே, எதிர் வரும் பருவ மழைக்குள்ளாக, ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.