/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாசடைந்த நாகதீர்த்த குளம் துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்
/
மாசடைந்த நாகதீர்த்த குளம் துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்
மாசடைந்த நாகதீர்த்த குளம் துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்
மாசடைந்த நாகதீர்த்த குளம் துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்
ADDED : அக் 25, 2025 02:07 AM

காஞ்சிபுரம்: கழிவுநீர் கலந்து மாசடைந்துள்ள சின்ன காஞ்சிபுரம் நாகதீர்த்த குளத்தை துார்வாரி சீரமைக்க, பக்தர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
சின்ன காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவில் உள்ள சங்கர லிங்கனார் சித்தர் சமாதி அருகில், நாகதீர்த்த குளம் உள்ளது. பழமையான குளத்து நீர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அருகில் உள்ள நாகாத்தம்மன் உள்ளிட்ட கோவில்களின் அபிேஷகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் குளத்தில் விடப்படுவதால், நீர் மாசடைந்த நிலையில் உள்ளது.
மேலும், மழைக் காலத்தில் குளத்து நீர், சங்கர லிங்கனார் சித்தர் சமாதி நுழைவாயில் வரை தண்ணீர் தேங்குகிறது.
இதனால், சங்கர லிங்கனார் சித்தர் சமாதிக்கு பக்தர்கள் சென்று வர முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, நாகதீர்த்த குளத்தை துார்வாரி, சுற்றிலும் கரை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பக்தர் கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

