/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லாரி மோதி இடிந்த நிழற்குடை புதுப்பிக்க கோரிக்கை
/
லாரி மோதி இடிந்த நிழற்குடை புதுப்பிக்க கோரிக்கை
ADDED : அக் 13, 2025 01:03 AM

வாலாஜாபாத்:மதுராநல்லுார் சாலையோரம் லாரி கவிழ்ந்த விபத்தின்போது சேதமான பயணியர் நிழற்குடையை புதுப்பித்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வாலாஜாபாத் - ஒரகடம் சாலையில் மதுராநல்லுார் கிராமம் உள்ளது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில், 5 லட்சம் ரூபாய் செலவில் கடந்த ஆண்டில் புதிதாக பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.
இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம், மதுராநல்லுார் சாலை ஓரத்தில் லாரி ஒன்று விபத்திற்குள்ளானது. அப்போது, அப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் புதிதாக கட்டிய நிழற்குடை இடிபாடுகளில் சிக்கி சேதம் அடைந்தது.
அச்சமயம் லாரி உரிமையாளர் அக்கட்டடத்தை புதுப்பித்து தருவதாக உறுதி அளித்து சென்றதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை நிழற்குடை சீரமைப்பு பணி செய்யப்படாமல் உள்ளது.
இதனால், மதுராநல்லுார் நிறுத்தத்தில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் நிழற்குடைக்குள் செல்ல இயலாத நிலை இருந்து வருகிறது. எனவே, இப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் சேதமான பயணியர் நிழற்குடையை சிரமைத்து தர சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.