/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை
/
சாலையோரத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 21, 2025 12:44 AM

உத்திரமேரூர்,:உத்திரமேரூரில் இருந்து நெல்வாய் வழியாக புக்கத்துறை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தி, 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றன.
இரு வழிச்சாலையாக இருந்த இச்சாலை கடந்த 2022ல், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், உத்திரமேரூர் அண்ணா நகர் பகுதியில், நெடுஞ்சாலையோரத்தில் தடுப்புகள் இல்லாமல் உள்ளது.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், நிலைத்தடுமாறி சாலையோர நீர்வரத்து கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளன.
தடுப்புகள் இல்லாததால் அப்பகுதியில், வாகன ஓட்டிகள் எப்போதும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இப்பகுதியில் விபத்து ஏற்படமால் தடுக்க அமைக்கப்படும், எச்சரிக்கை பலகைகள் இல்லாமல் உள்ளன.
மேலும், சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைந்தும் உள்ளது. எனவே, விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலையோரத்தில் ஆளுயர தடுப்புகள் அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

