/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை வளைவில் குட்டை தடுப்பு அமைக்க கோரிக்கை
/
சாலை வளைவில் குட்டை தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 20, 2025 12:22 AM

சிங்காடிவாக்கம்:வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் சாலை வளைவில் உள்ள மழைநீர் குட்டை, அப்பகுதி நிலத்தடி நீராதாரமாக விளங்கி வருகிறது. சிங்காடிவாக்கத்தில் இருந்து மருதம், தென்னேரி, சிறுவேடல், ஏனாத்துார், வையாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், குட்டை அமைந்துள்ள சாலை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையோரம் உள்ள குட்டைக்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், சாலை வளைவில் வாகனங்கள் திரும்பும் போது, குளத்தில் விழும் அபாயம் உள்ளது.
மேலும், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், குட்டையில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சிங்காடிவாக்கத்தில் சாலை வளைவில் உள்ள மழைநீர் குட்டைக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

