/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல்லமா நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
/
கல்லமா நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ADDED : மார் 26, 2025 07:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், கல்லமா நகர் உள்ளது. இப்பகுதியில் 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள, பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி அப்பகுதியைச் சேர்ந்தோர் உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால், பேருந்துக்கு வரும் மக்கள் அமர இடம் இல்லாததால் வெயில், மழை நேரங்களில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
எனவே, கல்லமா நகரில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது..