/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெடுஞ்சாலையில் கட்டுமானம் இடத்தில் எச்சரிக்கை தடுப்பு அமைக்க கோரிக்கை

ADDED : பிப் 26, 2024 03:44 AM

தண்டலம் : சென்னை- - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் ஸ்ரீபெரும்புதுார் அருகே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இருங்காட்டுக்கோட்டை அடுத்த, தண்டலம் பகுதியை கடந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் மீதுள்ள பாலத்தின்இருபுறமும் விரிவுபடுத்தி கட்டுமான பணி நடக்கிறது.
இங்கு வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் தடுப்புகள் அறிவிப்பு பலகை வைக்கவில்லை. இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வித்தில் சிக்கும் ஆபத்து உள்ளது.
அசம்பாவிதம் நடப்பதற்கு முன் பாலம் கட்டுமானம் பணி நடக்கும் இடத்தில் தடுப்புகள், அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.