/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுக்க கோரிக்கை
/
சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுக்க கோரிக்கை
சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுக்க கோரிக்கை
சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுக்க கோரிக்கை
ADDED : நவ 06, 2025 02:15 AM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் சாலையோரங்களில் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகை வைப்பதை தடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மாம்பாக்கத்தில், சாலையோரம் ஏராளமான மரங்கள் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு மேல் கடந்த இந்த மரங்கள், நெடுஞ்சாலை வாகன ஓட்டிகளுக்கு, வெப்பம் மற்றும் காற்று மாசு உள்ளிட்டவையை கட்டுப்படுத்தும் இயற்கை அரணாக உள்ளது.
இந்த மரங்களில், ரியல் எஸ்டேட், பள்ளி, கல்லுாரி விளம்பரம், தனியார் அறிவிப்பு உள்ளிட்ட விளம்பர பலகைகள் அதிக அளவில் ஆணி அடித்து வைக்கப்பட்டுள்ளன.
இதனால், நாளடைவில் மரங்கள் காய்ந்து பட்டுபோக அதிக வாய்ப்பு உள்ளது. சிறிய மரங்களில் ஆணி அடிப்பதால், அவை வளர்ச்சி அடைவதில் பாதிப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக, மரங்களில் ஆணி அடிப்பதன் வாயிலாக, மரங்களை சார்ந்து வாழும் குரங்குகள் மற்றும் அணில் போன்ற உயிரினங்களை காயம் ஏற்படுத்தும்.
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தினால் பெருவாரியான மரங்கள் அகற்றப்பட்டு, சாலையோரங்களில் சில இடங்களில் மட்டும் மரம் உள்ளது.
எனவே, சாலையோரம் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகைகள் வைப்பதை தடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

