/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்று பாலம் கீழ் எரிந்த சடலம் மீட்பு
/
பாலாற்று பாலம் கீழ் எரிந்த சடலம் மீட்பு
ADDED : அக் 04, 2024 07:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், மின் நகரில் உள்ள வள்ளலார் தெருவில் வசிப்பவர் அருண், 27; இவர், காஞ்சிபுரம் காந்திரோட்டில் உள்ள தனியார் துணி கடையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இவரது சடலம் எரிந்த நிலையில், செவிலமேடு பாலாற்று பாலத்தின் கீழ் இருந்துள்ளது. இதுபற்றி நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்குள்ள தடயங்களை சோதனை செய்தனர். அங்கு கிடைத்த தடயங்களை கொண்டு, அவர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இவர், இறந்தது பற்றி அவரது தாயார் ஜெயந்தி அளித்த புகாரையடுத்து, காஞ்சி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.