/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாய் அமைக்க குடியிருப்புவாசிகள் எதிர்பார்ப்பு
/
மழைநீர் வடிகால்வாய் அமைக்க குடியிருப்புவாசிகள் எதிர்பார்ப்பு
மழைநீர் வடிகால்வாய் அமைக்க குடியிருப்புவாசிகள் எதிர்பார்ப்பு
மழைநீர் வடிகால்வாய் அமைக்க குடியிருப்புவாசிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 22, 2025 12:53 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம் வேண்பாக்கம் கிராமத்தில் இருந்து, மதுரப்பாக்கம் செல்லும் சாலை உள்ளது. இதில், சின்ன மதுரப்பாக்கம் கிராம சாலையின் இருபுறமும் குடியிருப்புகள் உள்ளன. இச்சாலையோரத்தின் ஒருபுறம் மட்டும் குறிப்பிட்ட துாரம் வரை மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
கால்வாய் கட்டாமல் விடுப்பட்டுள்ள பகுதிகளில், அப்பகுதியினர் சிலர் தங்களது வீடுகளுக்கு செல்ல வசதியாக வழி ஏற்படுத்தி உள்ளனர். இதனால், கழிவுநீர் முறையாக வெளியேற வழி இல்லாமல், ஆங்காங்கே தேங்கியுள்ளது.
இவ்வாறு தேங்கும் கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும், துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சின்ன மதுரப்பாக்கம் கிராம சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.