/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்விளக்கு வசதி ஏற்படுத்த அரசு குடியிருப்பினர் கோரிக்கை
/
மின்விளக்கு வசதி ஏற்படுத்த அரசு குடியிருப்பினர் கோரிக்கை
மின்விளக்கு வசதி ஏற்படுத்த அரசு குடியிருப்பினர் கோரிக்கை
மின்விளக்கு வசதி ஏற்படுத்த அரசு குடியிருப்பினர் கோரிக்கை
ADDED : பிப் 13, 2025 12:54 AM

கோனேரிக்குப்பம்:காஞ்சிபுரம் ஒன்றியம் கோனேரிக்குப்பம் ஊராட்சி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் குடியிருப்பில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி இரு பிரிவு குடியிருப்புகளாக உள்ளது.
இதில், முதல் குடியிருப்பில் இருந்து, இரண்டாவது குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையில், தெரு மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை. சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியுள்ளது. பாம்புகள், விஷ பூச்சிகள் இரவு நேரத்தில் இரை தேடி சாலையில் உலாவுகின்றன.
இதனால், பள்ளி, கல்லுாரி முடிந்து வீடு திரும்பும் மாணவ - மாணவியர் மற்றும் பணி முடிந்து வருவோர், இருள் சூழ்ந்த சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும், இரவு நேரத்தில் சமூக விரோதிகளால் மாணவியர், பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் குடியிருப்பு எண் 1ல் இருந்து 2வது குடியிருப்புக்கு செல்லும் சாலையில் தெரு மின்விளக்கு வசதி ஏற்படுத்த, கோனேரிக்குப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.