/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை நிறைவேறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

ADDED : நவ 09, 2025 01:13 AM
காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விதமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, அவர்களின் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் கிராமத்தில், மாற்றுத்திறனாளிகள் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முன் களப்பணியாளர் சுதா தலைமை வகித்தார். தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.