/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பணி பாதுகாப்பு சட்டம் கேட்டு தீர்மானம் நிறைவேற்றம்
/
பணி பாதுகாப்பு சட்டம் கேட்டு தீர்மானம் நிறைவேற்றம்
பணி பாதுகாப்பு சட்டம் கேட்டு தீர்மானம் நிறைவேற்றம்
பணி பாதுகாப்பு சட்டம் கேட்டு தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : மார் 31, 2025 11:51 PM
காஞ்சிபுரம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் பிரபாகரன் தலைமையில், காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பியில் நேற்று நடந்தது.
மாவட்ட மகளிர் அணி செயலர் காயத்ரி வரவேற்றார். மாநில பொது செயலர் அன்பழகன், மாநில பொருளாளர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
மாநில செயற்குழுவில் ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் அரசின் கவனத்தை ஈர்க்க, வரும் 5ம் தேதி, மேல்நிலை விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒரு மணி நேரம் மதிப்பீட்டு பணியை புறக்கணிப்பது என, முடிவு செய்யப்பட்டது.
மே மாத விடுமுறை காலத்தில் ஆசிரியர்களை பணி செய்ய நிர்பந்திப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் தேவராஜன் நன்றி கூறினார்.