தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் :உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு

 ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் :உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு

 ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் :உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு


ADDED : ஏப் 22, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 06:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லையில் உள்ள 244 ஓட்டுச்சாவடிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான வினோத் நேற்று ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டசபைகளுககான தேர்தல் இன்று நடக்கிறது. இதையொட்டி 1,556 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லையில் உள்ள 244 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்களுக்கும், ஓட்டளிக்க வரும் வாக்காளர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான வினோத் நேற்று ஆய்வு செய்தார்..

இதில், ஓட்டுப்பதிவு நடக்கும் அறையில் உள்ள மின்விளக்குகள் போதுமான வெளிச்சம் தருகிறதா மின்விசிறிகள் நன்றாக இயங்குகிறதா, கண்காணிப்பு கேமராகக்கள் முறையாக இயங்குகிறதா மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க வந்து செல்வதற்கு ஏற்ப சாய்தள வசதி உள்ளதா, கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா, அனைத்து குழாய்களிலும் தண்ணீர் வருகிறதா என, ஆய்வு செய்தார்.

ஓட்டுச்சாவடியில் பணிபுரிய வந்துள்ள தேர்தல் அலுவலர்களிடம் ஓட்டுப்பதிவுக்கு தேவையான டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா, என்னென்ன வசதி தேவை என, கேட்டறிந்தார். தேவையான பொருட்களை உடனே வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us