/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வருவாய் மாவட்ட டென்னிஸ் மாணவ - மாணவியர் உற்சாகம்
/
வருவாய் மாவட்ட டென்னிஸ் மாணவ - மாணவியர் உற்சாகம்
ADDED : நவ 11, 2025 11:26 PM
சென்னை: சென்னை வருவாய் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டியில், மூன்று பிரிவுகளிலும் தனிநபர் மற்றும் இரட்டையரில், முதலிடங்களை கைப்பற்றிய மாணவ - மாணவியர், மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்
சென்னை வருவாய் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி, நுங்கம்பாக்கத்தில் நேற்று நடந்தது.
இதல், 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும், தனித்தனியாக தனிநபர் மற்றும் இரட்டையருக்கான போட்டிகள் நடந்தன. மொத்தம், 23 குறுவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
தனிநபர் 14 வயது மாணவர் பிரிவில், சோழிங்கநல்லுார் ஜேப்பியார் பள்ளி மாணவன் பிரதீவ், 13, மாணவியரில் அண்ணா நகர் சி.எஸ்.ஐ., ஜேசி மோசஸ் பள்ளியின் கனிஷ்கா, 13, ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
மாணவர் பிரிவு இரட்டை யரில், புரசைவாக்கம் டான் போஸ்கோவின் சித்தார்த், 13, - ஆலன், 11, ஜோடியும், மாணவியரில் இரட்டையர்களான ஹாரியட் லினியா, 13, - ஹாரியட் லிவியா, 13, ஜோடி ஆகிய முதலிடத்தை பிடித்தனர்.
மாணவர் 17 வயது தனிநபர் பிரிவில், டான்போஸ்கோவின் அஸ்வினய், 15; மாணவியரில் அரும்பாக்கம், சன் ஷைன் அகாடமியின் மகாலட்சுமி, 15, ஆகியோர் முதலிடத்தை கைப்பற்றினர்.
மாணவருக்கான இரட்டையரில், எம்.சி.சி., பள்ளியின் ஜேசன் ரீஸ், 15, - ஜான் ஹோப்பர் வேந்தர், 15, ஜோடியும், மாணவியரில் நெல்லை நாடார் பள்ளியின் தீர்த்தா, 16, - தாரணி, 14, ஜோடியும் முதலிடத்தை வென்றனர்.
தனிநபர் 19 வயது மாணவர் பிரிவில், சிந்தி மாடல் பள்ளியின் கவுசிக், 17; மாணவியரில் செயின்ட் அந்தோணி பள்ளியின் கேத்தரின், 18, ஆகியோர் முதலிடத்தை வென்றனர்.
மாணவருக்கான இரட்டையர் பிரிவில், டான்ேபாஸ்கோ பள்ளியின் அட்ரியன் அதிபன், 17, - ஆல்வின், 17, ஜோடியும், மாணவியரில் சேக்ரட் ஹார்ட் பள்ளியின் அவனிதா ஜாயிஸ், 15, - அதிதி, 14, ஜோடியும் முதலிடத்தை பிடித்தனர்.
முதலிடம் பிடித்த அனைவரும், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

