/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாழ்வாக செல்லும் மின் ஒயரால் விபத்து அபாயம்
/
தாழ்வாக செல்லும் மின் ஒயரால் விபத்து அபாயம்
ADDED : செப் 20, 2024 12:50 AM

காஞ்சிபுரம்,:வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் ஊராட்சி, பாவாசாகி பேட்டைக்கு செல்லும் பிரதான சாலையோரம் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இரு மின்கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் ஒயர்கள் மிகவும் தாழ்வாக செல்கின்றன.
இதனால்,இச்சாலையில் இரு கனரக வாகனங்கள் செல்லும்போதோ, வைக்கோல் ஏற்றி வரும் லாரி சாலையோரம் ஒதுங்கும்போதோ, தாழ்வாக செல்லும் மின்ஒயரில் உரசி மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, மின்விபத்தை தவிர்க்கும் வகையில் தாழ்வாக செல்லும் மின்ஒயர்களை சீரமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாவாசாகி பேட்டையினர் வலியுறுத்தி உள்ளனர்.