/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்
/
விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்
விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்
விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்
ADDED : ஏப் 08, 2025 12:41 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் கிராமத்தில், 2,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இங்குள்ள, விவசாய நிலங்களில் ஆங்காங்கே மின் கம்பங்கள் நடப்பட்டு, பம்ப் செட்டுகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விவசாய நிலம் ஒன்றில் உள்ள இரு கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் தளர்ந்து உள்ளன.
மேலும், அவ்வழியே கால்நடைகளை ஓட்டிச் செல்வோரும் தாழ்வாக செல்லும் மின் கம்பியால், மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை, இழுத்து கட்டி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.