/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரால் காஞ்சியில் நோய் பரவும் அபாயம் காஞ்சியில் நோய் பரவும் அபாயம்
/
வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரால் காஞ்சியில் நோய் பரவும் அபாயம் காஞ்சியில் நோய் பரவும் அபாயம்
வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரால் காஞ்சியில் நோய் பரவும் அபாயம் காஞ்சியில் நோய் பரவும் அபாயம்
வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரால் காஞ்சியில் நோய் பரவும் அபாயம் காஞ்சியில் நோய் பரவும் அபாயம்
ADDED : அக் 09, 2025 02:57 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் பஞ்சுகொட்டி தெருவில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர், ரிட்டன் வந்து, தேங்கியிருப்பதால், சுகாதார பிரச்னை காரணமாக, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 1975ல் செயல்படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இப்போது, மோசமான நிலையில் உள்ளது.
முறைகேடான பாதாள சாக்கடை இணைப்பு, சாய கழிவுகள் விடுவது என, பல வகையான பிரச்னைகள் காரணமாக, இத்திட்டத்தின் நோக்கமே நகரவாசிகளுக்கு முழுமையாக பலனளிக்காத சூழல் நிலவுகிறது.
ம ழைக்காலங்களில், பாதாள சாக்கடை கழிவுநீர் நகரின் பல இடங்களில் கொப்பளித்து மேலே வந்து, சாலைகளில் ஆறாக ஓடுவதும், வீடுகளுக்குள் ரிட்டன் ஆவதும் தொ டர்ந்து நடக்கிறது.
வடகிழக்கு பருவமழை துவங்கு ம் முன், பாதாள சாக்கடை தொட்டிகளை மாநகராட்சி சுத்தம் செய்ய வேண்டும் என, நகர மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக பல இடங்களில், கழிவுநீர் வீடுகளுக்கு ரிட்டன் ஆவது வாடிக்கையாகவிட்டது.
இதனால், வீடுகளில் வசிப்போருக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட் டு, நோய் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுகொட்டி தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகளும், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.
இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வீட்டிற்குள் கழிவுநீர் 'ரிட்டன்' ஆவதால், வீட்டு வாசல், கழிப்பறை, குளியல் அறை பகுதியில், ஒரு வாரமாக கழிவுநீர் தேங்கியுள்ளது.
இதனால், இத்தெரு மக்கள் வீட்டில் உள்ள குளியல் அறை, கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக புகார் தெரி வித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கழிவுநீர் ரிட்டன்' வருவதால், வீட்டில் உள்ள கழிப்பறை, குளியலறை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இயற்கை உ பாதைக்கும், குளிக்கவும் , உறவினர், நண்பர்கள், மாநகராட்சி பொது கழிப்பறை மற்றும் குளியல் அறையை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது.
வாசலில் கழிவுநீர் தேங்குவதால், வீட்டிற்குள் இருந்து வெளியே சென்று வருவதற்கு குழந்தைகள், முதியோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
துர்நாற்றம் வீசுவதால், வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.