/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் காஞ்சியில் நோய் பரவும் அபாயம்
/
குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் காஞ்சியில் நோய் பரவும் அபாயம்
குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் காஞ்சியில் நோய் பரவும் அபாயம்
குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் காஞ்சியில் நோய் பரவும் அபாயம்
ADDED : ஜூலை 30, 2025 11:45 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அப்பாராவ் தெருவிற்கு, மாநகராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரில், பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதால், அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 4வது வார்டுக்கு உட்பட்ட அப்பாராவ் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதிக்கு மாநகராட்சி மூலம், ஒரு நாள் விட்டு, ஒரு நாள் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒரு வாரமாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக அப்பகுதியில் வசிப்போர் புகார் தெரிவிக்கின்றனர்.
மாசடைந்த இந்த குடிநீரை பயன்படுத்துவோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, குடிநீரில், பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் வலியுறுத்தி வருகின்றனர்.