/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் தேங்கும் சகதிநீர் குடிநீரில் கலக்கும் அபாயம்
/
சாலையில் தேங்கும் சகதிநீர் குடிநீரில் கலக்கும் அபாயம்
சாலையில் தேங்கும் சகதிநீர் குடிநீரில் கலக்கும் அபாயம்
சாலையில் தேங்கும் சகதிநீர் குடிநீரில் கலக்கும் அபாயம்
ADDED : ஜூன் 01, 2025 12:16 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டு, திருவள்ளுவர் தெருவில், குடிநீர் தெரு குழாய் அமைக்கப்பட்டுள்ள பகுதியில், சாலை சேதமடைந்து தாழ்வாக உள்ளதால், லேசான மழைக்கே, சாலையோரம் மழைநீர் தேங்கும் நிலை உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு, சாலையில் தேங்கிய மழைநீர், சகதிநீராக மாறியுள்ளது. மேலும், அருகில் உள்ள தெரு குழாய் சமநிலைக்கு சகதிநீர் தேங்கியுள்ளது.
இதனால், தெருகுழாயின் வாயிலாக செல்லும் சகதிநீர், குடிநீருடன் கலந்தால், குடிநீர் மாசடையும் சூழல் உள்ளது. இதனால், குடிநீரை பயன்படுத்துவோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, திருவள்ளுவர் தெருவில், தெரு குடிநீர் குழாய் அமைந்துள்ள பகுதியில், சாலையோரம் மழைநீர் தேங்காமல் இருக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.