/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெருநகர் செய்யாற்றில் ஆற்று திருவிழா விமரிசை
/
பெருநகர் செய்யாற்றில் ஆற்று திருவிழா விமரிசை
ADDED : பிப் 13, 2025 12:41 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா பெருநகர் செய்யாற்றில், தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆற்று திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆற்று திருவிழா நேற்று அதிகாலை நடந்தது. முன்னதாக, பெருநகர் கிராமத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், கடந்த 2ல் தைப்பூச உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பின், தைப்பூச திருவிழாவின் 7ம் நாளில் திருத்தேர் பவனி நடந்தது. தொடர்ந்து, இறுதி நாளான நேற்று அதிகாலை 3:00 மணியளவில், பெருநகர் செய்யாற்றில் ஆற்று திருவிழா நடந்தது.
இதில் பெருநகர், உக்கல், ஆக்கூர், மானாம்பதி, கூழமந்தல் உள்ளிட்ட 25 கிராமங்களைச் சேர்ந்த தெய்வங்கள், அலங்காரத்துடன் செய்யாற்றில் எழுந்தருளினர்.