/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எச்சரிக்கை பலகையின்றி சாலை வளைவு
/
எச்சரிக்கை பலகையின்றி சாலை வளைவு
ADDED : அக் 23, 2024 01:04 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, கன்னிகாபுரத்தில் இருந்து, நத்தப்பேட்டை ரயில் நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, நத்தப்பேட்டை ரேஷன் கடை, ரயில் நிலையம், களியனுார் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் அபாயகரமான சாலை வளைவு ஒன்று உள்ளது. சாலை வளைவு குறித்து, வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில், எச்சரிக்கை குறியீடு பலகை எதுவும் அமைக்கப்படவில்லை.
இதனால், கன்னிகாபுரத்தில் இருந்து, நத்தப்பேட்டை சாலையில் வேகமாகச் செல்லும் வாகன ஓட்டிகள், சாலை வளைவில் செல்லும்போது, திடீரென எதிரே வரும் வாகனத்தால் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, நத்தப்பேட்டை சாலை வளைவு பகுதியில், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், சாலை வளைவு குறித்த எச்சரிக்கை குறியீடு பலகை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.