/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாறு பாலத்தில் சாலை சேதம் ஓரிக்கையில் விபத்து அபாயம்
/
பாலாறு பாலத்தில் சாலை சேதம் ஓரிக்கையில் விபத்து அபாயம்
பாலாறு பாலத்தில் சாலை சேதம் ஓரிக்கையில் விபத்து அபாயம்
பாலாறு பாலத்தில் சாலை சேதம் ஓரிக்கையில் விபத்து அபாயம்
ADDED : மே 02, 2025 01:12 AM

ஓரிக்கை:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கைக்கும், குருவிமலைக்கும் இடையே செல்லும் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இப்பாலம்வழியாக, கட்டுமானப்பணிக்கு ஜல்லி,எம்.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாக னங்களால் சாலையில் இணைப்பு பகுதியில் ஆங்காங்கே, விரிசல் ஏற்பட்டு சாலை சேதமடைந்துஉள்ளது.
இதனால், இப்பாலத்தின் வழியாக செல்லும் சிறியசக்கரம் கொண்ட இருசக்கரவாகன ஓட்டிகள் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியில் நிலை தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில்,ஓரிக்கை பாலாறு உயர் மட்ட பாலத்தில், சேதமடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள்வலியுறுத்தி உள்ளனர்.