/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பருவமழையால் சேதமடைந்த பாலத்தின் சாலை சீரமைப்பு
/
பருவமழையால் சேதமடைந்த பாலத்தின் சாலை சீரமைப்பு
ADDED : அக் 19, 2024 01:55 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் செவிலிமேடு - புஞ்சையரசந்தாங்கல் இடையே உள்ள பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் வழியாக தினமும், இருசக்கர வாகனம், கார், பேருந்து, லாரி என, ஆயிரக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
சமீபத்தில் பெய்த வடகிழக்கு மழையின் காரணமாக, செவிலிமேடு உயர்மட்ட பாலத்தின் சாலைகள் சேதமடைந்து, கம்பிகள் வெளியில் தெரியும் வகையில், ஆபத்தான நிலையில் இருந்தது. சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், செவிலிமேடு பாலாற்று உயர்மட்ட பாலத்தின் சாலை மற்றும் காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில், மழையால் பல்வேறு இடங்களில் சேதமடைந்த சாலைகயை, நெடுஞ்சாலைத் துறை சார்பில் சீரமைப்பு பணி நடக்கிறது.