/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 22, 2025 12:54 AM

காஞ்சிபுரம்:இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளையின் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி சங்க தலைவர் டாக்டர் ரவி தலைமையில் நேற்று நடந்தது. சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஹிலாரினா ஜோஷிதா நளினி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
அரசு மருத்துவமனையில் துவங்கிய பேரணி முக்கிய வீதி வழியாக சென்று, மீண்டும் அரசு மருத்துவனையில் நிறைவு பெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., சண்முகம், வாகன ஓட்டிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கினார். தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
பேரணியில் முன்னாள் சங்க தலைவர்கள் டாக்டர்கள் மனோகரன், விக்டோரியா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர், ஆசிரியையர் பங்கேற்றனர்.