/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 11, 2024 12:19 AM
காஞ்சிபுரம்:சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது. இந்த விழிப்புணர்வு பேரணிக்கு, காஞ்சிபுரம் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக பங்றே்று, சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, காவலான்கேட் வழியாக முக்கிய வீதிகள் சென்று, மீண்டும் கலெக்டர் அலுவலக வளாகத்தை வந்தடைந்தது.
இருசக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணிய வேண்டிய அவசியம் குறித்து, நாட கலைஞர்கள் வாயிலாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.