மண் அரிப்பால் சாலையோர பள்ளம்: வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
மண் அரிப்பால் சாலையோர பள்ளம்: வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
UPDATED : அக் 11, 2026 03:52 PM
ADDED : அக் 11, 2026 03:46 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செவிலிமேடு பாலாற்று பாலம் அருகே, மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம், செவிலிமேடு சாலை வழியாக அய்யங்கார்குளம், பெருநகர், மானாம்பதி, வந்தவாசி, செய்யாறு திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், செவிலிமேடு பாலாற்று பாலத்தின் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரே, மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், செவிலிமேடில் மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
