ADDED : நவ 15, 2024 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் -- அரக்கோணம் சாலை, காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருப்படிதட்டடை கிராமத்தை ஒட்டியுள்ள சாலையில், கடந்த ஆண்டு புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக கருப்படிதட்டடை குட்டைகரை அருகில், மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை ஒட்டியுள்ள சாலையோரம் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், இச்சாலையில் வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.