/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 12, 2025 05:46 AM

காஞ்சிபுரம்: மருதத்தில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வகையில், சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, மருதம் கூட்டு சாலையில் இருந்து, புத்தகரம் கிராமம் வழியாக ஊத்துக்காடு கிராமத்திற்கு செல்லும் சாலை, முதல்வர் சாலைகள் மேம்பாட்டு திட்டத் தில், மருதம் கூட்டு சாலை முதல், புத்தகரம் ஏரிக்கரை வரை, மூன்று மாதங்களுக்கு முன் செப்பணிடப்பட்டது.
இந்த சாலை வழியாக, வாலாஜாபாதில் இருந்து, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்வோர், ஊத்துக் காடு, புத்தகரம், கரூர், ராஜகுளம் வழியாக, கார் மற்றும் கனரக வாகனங்களில் செல்கின்றனர்.
புதிய தார் சாலை யோரம் மண் அரிப்பால், சேதம் ஏற்பட்டு வெட்டுப்பள்ளம் போல உள்ளது.
இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள், மற்றொரு வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கும் போது, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது என, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
எனவே, சாலையோர பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.