/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
/
சாலையோரம் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் குப்பை குவியல் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
ADDED : ஜன 06, 2026 05:37 AM

கா ஞ்சிபுரம் பஞ்சுகொட்டி தெரு வழியாக, காமாட்சியம்மன் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட பகுதிக்கு பலர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், மின்மாற்றி அமைந்துள்ள பகுதியை, குப்பை கொட்டும் இடமாக மாற்றி வருகின்றனர்.
மாநராட்சி நிர்வாகம் குப்பையை அகற்றாததால் சாலை முழுதும் குவியலாக உள்ளது. குப்பையில் வீசப்பட்ட கெட்டுப்போன உணவு, இறைச்சி கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நாள் கணக்கில் தேங்கியுள்ள குப்பையால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பஞ்சுகொட்டி தெருவில் உள்ள குப்பையை அகற்றவும், அப்பகுதியில் குப்பை கொட்ட தடை விதிக்கவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.ஜானகிராமன், காஞ்சிபுரம்.