/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் அரிப்பால் சாலைேயார பள்ளம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
மண் அரிப்பால் சாலைேயார பள்ளம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மண் அரிப்பால் சாலைேயார பள்ளம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மண் அரிப்பால் சாலைேயார பள்ளம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 04, 2024 06:24 AM

வையாவூர் : வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துாரில் இருந்து, நல்லுார், தர்மநாயக்கன்பட்டரை வழியாக வையாவூர் செல்லும் சாலை உள்ளது.
இச்சாலையின் குறுக்கே மழைநீர் மற்றும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறுபாலத்தில் வழியாக சென்ற மழைநீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, சிறுபாலத்தின் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சாலையோர பள்ளத்தை சீரமைத்து அங்கு, தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.