ADDED : டிச 02, 2024 02:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் - -வந்தவாசி நெடுஞ்சாலையை பயன்படுத்தி, செய்யாறு, வந்தவாசி, திண்டிவனம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இவ்வழியே, செல்லும் வாகனங்கள், உத்திரமேரூர் ஏரியில் விழுந்து, விபத்து ஏற்படாமல் இருக்க, இருபுறமும் சிமென்ட் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, சிமென்ட் தடுப்புச்சுவரின் ஒரு பகுதி சேதமடைந்து, சரிந்துள்ளது. இப்பகுதியில் மின் விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்வோர், நிலைதடுமாறி ஏரியில் விழுந்து,விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.