/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் மண் அரிப்பு குண்ணவாக்கத்தில் அபாயம்
/
சாலையோரம் மண் அரிப்பு குண்ணவாக்கத்தில் அபாயம்
ADDED : ஜன 05, 2025 01:10 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் குண்ணவாக்கம் கிராமத்தில், திருப்புலிவனம் -- சாலவாக்கம் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, அப்பகுதியை சேர்ந்தோர் உத்திரமேரூர், சாலவாக்கம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
இங்குள்ள சாலையோர பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து, விபத்தில் சிக்காதபடி, இருபுறமும் மண் கொட்டப்பட்டு இருந்தது. குண்ணவாக்கம் பகுதியில், 'பெஞ்சல்' புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையின்போது, சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், எந்நேரமும் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும், முன்னே செல்லும் வாகனத்தை முந்தி செல்ல முயலும்போதும், சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தில், மண் கொட்டி பள்ளத்தை மூட வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். எனவே, சாலையோரத்தில் ஏற்பட்ட பள்ளத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.