/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர பட்டுப்போன மரத்தால் மருத்துவன்பாடியில் விபத்து அபாயம்
/
சாலையோர பட்டுப்போன மரத்தால் மருத்துவன்பாடியில் விபத்து அபாயம்
சாலையோர பட்டுப்போன மரத்தால் மருத்துவன்பாடியில் விபத்து அபாயம்
சாலையோர பட்டுப்போன மரத்தால் மருத்துவன்பாடியில் விபத்து அபாயம்
ADDED : நவ 26, 2025 03:38 AM

உத்திரமேரூர்: மருத்துவன்பாடியில், சாலையோரத்தில் பட்டுப்போன மரத்தை அகற்ற, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் அடுத்த மருத்துவன்பாடியில், காஞ்சிபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி திருப்புலிவனம், வெங்கச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர், உத்திரமேரூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர்.
அதேபோல, உத்திரமேரூர், மானாம்பதியைச் சேர்ந்தவர்கள் காஞ்சி புரம், வாலாஜாபாத் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இச்சாலையை ஒட்டி இருபுறமும் பசுமை சூழலை ஏற்படுத்தும் விதமாக, நெடுஞ்சாலை துறையினர், 35 ஆண்டுக்கு முன், பல வகையான மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.
அதில், பெரும்பாலான மரங்கள் ஆயுட்காலத்தை தாண்டிய நிலையில் உள்ளன. குறிப்பாக, மருத்துவன்பாடியில் சாலையோரத்தில் உள்ள மாமரம் ஒன்று பட்டுப்போய் காய்ந்த நிலையில் உள்ளது.
இந்த மரத்தின் கிளைகள் அவ்வப்போது உடைந்து விழுந்து வருகின்றன. மேலும், மழை மற்றும் காற்று வீசும் நேரங்களில் மரமானது முறிந்து, அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, மருத்துவன்பாடியில், சாலையோரத்தில் பட்டுப்போன மரத்தை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

