ADDED : ஜூன் 12, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காரையை சேர்ந்த ரவுடி ரவிச்சந்திரன், தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதால், குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபும் அடுத்த, காரை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 25; இவர் மீது, கொலை, கொலை முயற்சி மற்றும் கஞ்சா என, 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை, பொன்னேரிக்கரை போலீசார் கைது செய்து, சிறையில் உள்ளார்.
தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ரவிச்சந்திரன் ஈடுபடுவதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., சண்முகம், காஞ்சிபுரம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டதன்படி, குண்டாசில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை, வேலுார் சிறையில் உள்ள ரவிச்சந்திரனிடம் போலீசார் வழங்கினர்.