/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரவுடி வினோத்குமார் குண்டாசில் கைது
/
ரவுடி வினோத்குமார் குண்டாசில் கைது
ADDED : ஆக 06, 2025 02:04 AM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வினோத்குமார், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் நகரில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார், 26; இவர் மீது, சிவகாஞ்சி காவல் நிலையத்தில், கொலை, கொலை முயற்சி என, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கஞ்சா வழக்கில் கைதாகி, தற்போது இவர் வேலுார் சிறையில் உள்ளார். இவரை, ஓராண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்விக்கு பரிந்துரை செய்தார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை, வேலுார் சிறையில் போலீசார் வழங்கினர்.

