/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்நடை மருந்தக கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
/
கால்நடை மருந்தக கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
கால்நடை மருந்தக கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
கால்நடை மருந்தக கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
ADDED : நவ 15, 2024 12:41 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், இளநகர் கிராமத்தில், கால்நடை மருந்தக கட்டடம் உள்ளது. இந்த கட்டடம், 2017- - -18ம் நிதி ஆண்டில், நபார்டு வங்கி நிதியுதவி திட்டத்தில், 31 லட்சத்து, 50,000 ரூபாய் செலவில் கட்டப்பட்டு பயன்பாட்டில் 1உள்ளது.
இங்கு, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த கால்நடைகளுக்கு, செயற்கை கருவூட்டல், கர்ப்பம் கண்டறிதல், கால்நடை காப்பீடு ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது, கட்டடத்தின் மேல்தளத்தில் பராமரிப்பு இல்லாததால், அரச மரச்செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால், கட்டடத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, கால்நடை மருந்தக கட்டட மேல்தளத்தில் வளர்ந்துள்ள, அரச மரச்செடிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.