/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
/
மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
ADDED : நவ 01, 2025 08:57 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அருகே, மளிகை கடையின் பூட்டை உடைத்து, ஒரு லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
காஞ்சிபுரம், ரயில்வே சாலையில் உள்ள ராஜாஜி மார்க்கெட் எதிரே உள்ள சிறிய சந்து ஒன்றில், வீரலட்சுமி மளிகை கடை இயங்கி வருகிறது.
சில்லரை மற்றும் மொத்த வியாபாரமாக இக்கடை இயங்குவதால், இரவு 10:00 மணி வரை இப்பகுதியில் கூட்டம் இருக்கும்.
வழக்கம்போல, கடை உரிமையாளர் பாலகுமார், நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு, வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
நேற்று காலை பாலகுமார், கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார்.
உள்ளே சென்று பார்த்தபோது, கடையிலிருந்த ஒரு லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
கடை உரிமையாளர் பாலகுமார், அளித்த புகாரையடுத்து, விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

