/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுகாதார நிலையங்களுக்கு ரூ.10 லட்சம் உபகரணங்கள்
/
சுகாதார நிலையங்களுக்கு ரூ.10 லட்சம் உபகரணங்கள்
ADDED : மார் 18, 2025 08:47 PM
குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியத்தில் குன்றத்துார், மாங்காடு, சோமங்கலம், படப்பை, எழிச்சூர் ஆகிய ஐந்து இடங்களில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ளன.
இந்த ஐந்து சுகாதார நிலையங்களுக்கும், தனியார் தொழிற்சாலை சார்பில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில், 30 படுக்கைகள், 30 சக்கர நாற்காலிகள், இன்குபேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் அடங்கியுள்ளன. அதற்கான விழா நேற்று குன்றத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், குன்றத்துார் நகர சபை தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
தொழிற்சாலை மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.