/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விதிமீறிய 159 வாகனங்களுக்கு ரூ.13.61 லட்சம் அபராதம்
/
விதிமீறிய 159 வாகனங்களுக்கு ரூ.13.61 லட்சம் அபராதம்
விதிமீறிய 159 வாகனங்களுக்கு ரூ.13.61 லட்சம் அபராதம்
விதிமீறிய 159 வாகனங்களுக்கு ரூ.13.61 லட்சம் அபராதம்
ADDED : நவ 06, 2025 02:22 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், அக்., மாதம், வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையிலான அலுவலர்கள் வாகன தணிக்கை செய்து, விதிமீறிய 159 வாகனங்களுக்கு, ஒரே மாதத்தில், 13 லட்சத்து, 61,444 ரூபாய் அபராதமாக வசூல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவுபடி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர், காஞ்சி புரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
இதில், விதியை மீறி அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்காத, ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, வரி செலுத்தாத, தார்பாலின் மூடாத, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் வாகனங்கள் என, விதியை மீறி இயக்கிய 159 வாகனங்கள் கடந்த அக், மாத ம் கண்டறியப்பட்டன.
இந் த வாகனங்களுக்கு வரி, அபராதம் வசூலித்தும், வாகனத்தை சிறை பிடித்து அபராதம் வசூலித்தது என, ஒரே மாதத்தில் மொத்தமாக 13 லட்சத்து 61,444 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
விதியை மீறும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும், ஓட்டுநர் உரிமம், தகுதி சான்று, அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனம், அதிகளவில் பயணியர் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.

