/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீமீஸ்வர் கோவிலை புனரமைக்க ரூ.2.96 கோடி நிதி ஒதுக்கீடு
/
வீமீஸ்வர் கோவிலை புனரமைக்க ரூ.2.96 கோடி நிதி ஒதுக்கீடு
வீமீஸ்வர் கோவிலை புனரமைக்க ரூ.2.96 கோடி நிதி ஒதுக்கீடு
வீமீஸ்வர் கோவிலை புனரமைக்க ரூ.2.96 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : ஏப் 18, 2025 01:13 AM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், படப்பை அடுத்த, செரப்பனஞ்சேரியில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுபாட்டில், சொர்ணாம்பிகை சமேத வீமீஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவில் 2,000 ஆண்டுக்கு முன், குலோத்துங்க மன்னரால் கட்டபட்டது. 27 நட்சத்திரங்களுக்கு, வின் மீன்களுக்கும் அதிபதியானதால் வீமீஸ்வர் என்று இத் ஸ்தலம் அழைக்கப்படுகிறது.
சூரிய பகவானுக்கு அருள்பாலித்ததால், இக் கோவிலில் சூரிய பகவான் தனியாக மேற்கு நோக்கி சிவப்பெருமானை வணங்கியதாக வரலாறு குறிப்பிடுகிறது.
இந்த கோவில், பல ஆண்டுகளாக எந்த பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை. இதனால், கோவில் கோபுரம் மற்றும் சுவர் உள்ளிட்டவை முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும், பக்தர்கள் பங்களிப்புடன் பிரதோஷம், சிவராத்திரி விழா உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2,000 ஆண்டு பழமையான இக்கோவிலை புனரமைக்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் நிதியின் கீழ், 2.96 கோடி ரூபாய் மதிப்பில், கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் டெண்டர் விடப்பட்டு, பணிகள் விரைவில் துவங்கப்படும் என, ஹிந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.