/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
60 மாணவ - மாணவியருக்கு ரூ.4.8 கோடி கல்வி கடனுதவி
/
60 மாணவ - மாணவியருக்கு ரூ.4.8 கோடி கல்வி கடனுதவி
ADDED : பிப் 15, 2024 09:45 PM

காஞ்சிபுரம்:ஏழை மாணவர்கள் கல்விக்கடன் பெற, மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட 'வித்யாலஷ்மி போர்டல்' எனும் இணையதளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சிறப்பு செயலாக்க திட்டம் அறிவுறுத்திஉள்ளது.
ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட கல்லுாரிகளில் ஒருங்கிணைப்பாளர்கள் வாயிலாக, 'வித்யாலஷ்மி போர்டல்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பரில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா பென்னலுாரில் நடந்த நிகழ்ச்சியில், 112 மாணவ - மாணவியருக்கு, 13.1 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.
இப்போது, இரண்டாம் கட்டமாக, காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பியில் உள்ள திருமலை பொறியியல் கல்லுாரியில், அனைத்து வங்கிகளின் சார்பில், சிறப்பு கல்விக்கடன் முகாம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், 60 கல்லுாரி மாணவ - மாணவியருக்கு 4.81 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி கடனுதவிகளை, கலெக்டர் கலைச்செல்வி மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், முன்னோடி வங்கி மேலாளர் திலீப் உட்பட பலர் பங்கேற்றனர்.