/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மளிகை கடையில் ரூ.70,000 திருட்டு
/
மளிகை கடையில் ரூ.70,000 திருட்டு
ADDED : டிச 08, 2024 07:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:குன்றத்துார் அருகே பெரியார் நகரில் பட்டுவேல், 45, என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பெட்டியில் இருந்த 70,000 ரூபாயை திருடி சென்றனர்.
இதுகுறித்த புகாரின்படி குன்றத்துார் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.