/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரட்டை திருமாளிகையை சீரமைக்க ரூ.92 லட்சம்
/
இரட்டை திருமாளிகையை சீரமைக்க ரூ.92 லட்சம்
ADDED : டிச 21, 2024 10:07 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், 17 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி நடைபெறும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது.
இதையடுத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசு நிதி, கமிஷனர் பொது நல நிதி, உபயதாரர்களின் நிதி என, பல்வேறு நிதி ஆதாரங்கள் அடிப்படையில், திருப்பணிகள் கடந்த 2023 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவிலின் குளம், பிரகாரங்களில் தரைதளம் அமைத்தல், மண்டங்கள் சீரமைத்தல், கோபுரங்கள் சீரமைத்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கோவிலில் உள்ள இரட்டை திருமாளிகை, 92 லட்ச ரூபாய் மதிப்பில் சீரமைக்க, கோவில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. இரட்டை திருமாளிகையை பழமை மாறாமல், 12 மாதங்களில் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன. டெண்டர் பணி முடிந்தவுடன் பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.