/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
100 நாள் ஊதியமாக ரூ.27.10 கோடி விடுவிப்பு ரூ.32.48 கோடி வங்கி பரிமாற்றத்திற்கு காத்திருப்பு
/
100 நாள் ஊதியமாக ரூ.27.10 கோடி விடுவிப்பு ரூ.32.48 கோடி வங்கி பரிமாற்றத்திற்கு காத்திருப்பு
100 நாள் ஊதியமாக ரூ.27.10 கோடி விடுவிப்பு ரூ.32.48 கோடி வங்கி பரிமாற்றத்திற்கு காத்திருப்பு
100 நாள் ஊதியமாக ரூ.27.10 கோடி விடுவிப்பு ரூ.32.48 கோடி வங்கி பரிமாற்றத்திற்கு காத்திருப்பு
ADDED : மே 03, 2025 10:31 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு, மூன்று மாதங்களுக்குரிய ஊதியமாக வழங்க வேண்டி ஒதுக்கிய 65 கோடி ரூபாயில், 27.10 கோடி ரூபாய் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டு உள்ளது.
உறுதியளிப்பு
மீதம், 32.48 கோடி ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கு பரிமாற்றத்திற்கு காத்திருக்கிறது என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், மத்திய அரசு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், 1.37 லட்சம் குடும்பங்களில், 1.68 லட்சம் பேர், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். இதில், 1.29 லட்சம் பேருக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.
வாரத்திற்கு ஆறு நாட்கள் என, சுழற்சி முறையில், 100 நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், தினசரி சராசரியாக 40,918 பேருக்கு, 100 நாள் வேலை வழங்கப்படுகிறது.
மூன்று மாதங்களாக, 100 நாள் வேலை வாய்ப்புக்குரிய கூலி தொகை தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. அதன்படி, 12 வாரங்களுக்குரிய கூலி தொகையாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 65 கோடி ரூபாய் நிலுவை தொகை உள்ளது என, கூலித்தொழிலாளர்கள் புலம்பி வந்தனர்.
புலம்பல்
ஏப்ரல் மாதம் துவக்கத்தில், 5.42 கோடி ரூபாய், 40,000 கூலி தொழிலாளர்களுக்கு விடுவிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் 27.10 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 5.42 கோடி, தற்போது 27.10 கோடி ரூபாய் என, மொத்தம் 32.52 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது.
மீதம், 32.48 கோடி ரூபாய் விடுவிக்கவில்லை என, தொழிலாளர்கள் மற்றும் பணி ஒப்பந்ததாரர்கள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகம் முழுதும், 100 நாள் வேலைக்குரிய தொகை விடுவிக்கப்பட்டு உள்ளது. நம் மாவட்டத்திற்கு நிலுவையாக, 59.42 கோடி ரூபாய் ஊரக வளர்ச்சி கணக்கிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
அதை, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் திட்ட கணக்கு வாயிலாக பிரித்து அளிக்கப்பட்டு உள்ளது.
பயனாளிகளின் கணக்கிற்கு செலுத்த, அவரவர் வங்கிகளுக்கு மின்னணு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் கிடைத்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

