/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முதுகலை ஆசிரியர் தேர்விற்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
/
முதுகலை ஆசிரியர் தேர்விற்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
முதுகலை ஆசிரியர் தேர்விற்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
முதுகலை ஆசிரியர் தேர்விற்கு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
ADDED : அக் 07, 2025 01:57 AM
காஞ்சிபுரம், ஆசிரியர் தேர்வு வாரியத்தில், முதுகலை தேர்வு எழுதும் தேர்வர்கள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, முதன்மை கல்வி அலுவலக செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நுழைவுச்சீட் இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக, முதுகலை, உடற்க ல்வி இயக்குநர், கணி னி பயிற்றுனர்களுக்கு, அக்.,12ம் தேதி தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்விற்கு, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், 13 தேர்வு மையங்களில், 3,986 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இந்த தேர்வு எழுத வரும் தேர்வர்கள் காலை, 8:30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு நுழைவுச்சீட்டுடன் வந்து விட வேண்டும்.
கா லை, 9:00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்களை தேர்வு எழுதும் கூடத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் .
மேலும், மதியம் 1:30 மணிக்கு முன் தேர்வு கூடத்தில் இருந்து, வெளியேற அனுமதி இல்லை.
தேர்வு நுழைவுச்சீட்டு இன்றி, தேர்வர்களை தேர்வு கூடத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பேருந்து வசதி ஆதார் அட்டை, நிரந்தர அடையாள எண், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில், அசல் மற்றும் நகலில் ஏதேனும் ஒன்று தேர்வர்கள் எடுத்து வர வேண்டும்.
மின்னணு கடிகாரம், புளூடூ த் ஆகிய மின்னணு உபயோகப்பொருட்களை தேர்வு கூடத்திற்கு எடுத்து செல்ல அனுமதி இல்லை. அனைத்து தேர்வு மையங்களுக்கும், சிறப்பு அரசு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.